உதகையின் 200வது ஆண்டுவிழா!-நீலகிரி மலைகளின் தொல்லியல் சின்னங்களு குறித்த கண்காட்சி! MP அ.ராசா தொடங்கிவைப்பு!

Published : May 18, 2023, 04:48 PM IST
உதகையின் 200வது ஆண்டுவிழா!-நீலகிரி மலைகளின் தொல்லியல் சின்னங்களு குறித்த கண்காட்சி! MP அ.ராசா தொடங்கிவைப்பு!

சுருக்கம்

உலக அருங்காட்சியகத்தை முன்னிட்டு,  நீலகிரி மலைகளின் தொல்லியல் சின்னங்களு குறித்த கண்காட்சியை திமுக எம் பி அ.ராசா  மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பார்வையிட்டனர்.

நீலகிரி மாவட்டம், உதகையின் - 200 வது ஆண்டு விழா மற்றும் உலக அருங்காட்சிய தினத்தை முன்னிட்டு,  நீலகிரி மலைகளின் தொல்லியல் சின்னங்கள்  குறித்த சிறப்பு கண்காட்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.  இதனை, .திமுக எம்.பி.ராசா,  சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டனர். 

இந்த கண்காட்சியில்,  நீலகிரி மலைகளின் தொன்மையினை விளக்கும் வகையில், வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் இக்காலம் முதலான இம்மாவட்டத்தில் பல இடங்களில் காணப்படும் சான்றுகளான வரலாற்று முந்தைய காலப் பாறை ஓவிய காட்சிகள் மற்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற் கால பண்பாட்டு நினைவு சின்னங்களும், அது தொடர்பான ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இக்கண்காட்சியின் வழி நீலகிரி மாவட்டத்தில் ஐரோப்பியர்கள் வருகைக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு இடங்கள், தொல்பொருட்கள் மற்றும் இதர வரலாற்று குறிப்புகள் ஆகியவையும்,  கண்காட்சியில் வண்ண வரைபடங்கள், ஓவியங்கள் கண்காட்சிக்கான அச்சிடப்பட்ட படங்கள் மற்றும் இதர குறிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் உட்பட பலர் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

School Holiday: மாணவர்களின் கவனத்திற்கு..! பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! அரசு அறிவிப்பு!
நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை! அவலாஞ்சியில் 292 மி.மீ பதிவு! 2 நாள் ஆரஞ்சு அலர்ட்!