நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்பு யானைக்கு காலை உணவு வழங்கும் போது திடீரென ஆவேசமான யானை தாக்கியதில் பாகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு அபாரனயம் யானைகள் கேம்பில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வளர்க்கப்படும் மசினி என்ற யானையை பாலன் என்ற பாகன் தான் பராமரித்து வருகிறார். தினமும் யானையை நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்வது, குளிப்பாட்டுவது, உணவு வழங்குவது என அனைத்து பணிகளையும் பாலன் தான் செய்து வந்துள்ளார்.
அந்த வகையில் பாலன் வழக்கம் போல் இன்று காலை வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கியுள்ளார். அப்போது திடீரென ஆவேசமடைந்த யானை மசினி ஆக்ரோஷமாக பாகன் பாலனை தாக்கியுள்ளது. இதில் பாலன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.
undefined
கிருஷ்ணகிரியில் கோர விபத்து; பேருந்து மீது மோதி 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி
இந்நிலையில் பாலனை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து முதுமலை வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் பாலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.