தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ராகி வழங்கும் திட்டம் - நாளை முதல் துவக்கம்

By Velmurugan s  |  First Published May 2, 2023, 4:16 PM IST

தமிழ்நாட்டில் முதல்முறையாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ராகி வழங்கும் திட்டம் நாளை முதல் நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்ட ரேஷன் கடைகளில் துவக்க பட உள்ளது.


நாடு முழுவதும் இந்த ஆண்டு சிறு தானிய ஆண்டாக கடைப்பிடிக்கப்பட்டு சிறுதானியங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தல 2 கிலோ ராகி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை துவங்க உள்ள இத்திட்டத்திற்கு இருப்பு குறித்தும், நிகழ்ச்சி குறித்து தமிழக உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், மலை மாவட்டமான நீலகிரி மற்றும் தருமபுரி ஆகிய இரு மாவட்டங்களில் முதல் கட்டமாக இத்திட்டம் துவங்க உள்ளதாகவும் இதனால் சிறு தானிய விளைவிக்கும் விவசாயிகள் பயனடைவர் என்றும், தற்போது 1980 மெட்ரிக் டன் ராகி கையிருப்பு உள்ளதாகவும், நீலகிரி மாவட்டதிற்கு 480 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளதாகவும் இதில் 400 மெட்ரிக் டன் பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Latest Videos

undefined

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அரங்கேற்றம்

மேலும் நாளை இத்திட்டத்தினை தமிழக அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன், கா. ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளதாக இன்று உதகையில் உள்ள தமிழ்நாடு வாணிப கழக உணவுப் பொருட்கள் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

click me!