கொரோனா குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு... வீட்டுக்குள் புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்..!

By vinoth kumarFirst Published Apr 12, 2020, 5:22 PM IST
Highlights

இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தோற்று நாளுக்குநாள் அதிவேகமாகப் பரவிவரும் நிலையில், கொரோனவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதேபோன்று, சமூக வலைதளங்களில், கொரோனா குறித்து வீண் வதந்திகள் மற்றும் அவதூறுகள் பரவி விடக் கூடாது என்பதற்காக சமூக வலைதளங்களைத் அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

நாமக்கல்லில் வசித்து வரும் முஸ்லீம் குடும்பத்தினரை பற்றியும், அவர்களில் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாகவும் முகநூல் பக்கத்தில் அவதூறாக செய்தி பரப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தோற்று நாளுக்குநாள் அதிவேகமாகப் பரவிவரும் நிலையில், கொரோனவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதேபோன்று, சமூக வலைதளங்களில், கொரோனா குறித்து வீண் வதந்திகள் மற்றும் அவதூறுகள் பரவி விடக் கூடாது என்பதற்காக சமூக வலைதளங்களைத் அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சந்தைபேட்டை புதூர், சின்னான் தெருவை சேர்ந்தவர் வரதராஜன் (40). இவர் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர், தனது முகநூல் பக்கத்திலும், வாட்ஸ்- அப்பிலும் நாமக்கல்லில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும், இதனால் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் பரவி, 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும், மேலும் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதாகவும் தவறான தகவலை பதிவு செய்தார். இந்த தகவல் வைரலானது. 

இது தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தியதில்  அவதூறு செய்தியை பரப்பியது எலெக்ட்ரீசியன் வரதராஜன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

click me!