மத்திய அரசு மக்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருள் வழங்குகிறது; மாநில அரசு போதை பொருளை விற்கிறது - பாஜக

By Velmurugan s  |  First Published Mar 2, 2024, 3:46 PM IST

மத்திய அரசு மலிவு விலையில் மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு விற்கிறது, ஆனால் மாநில அரசோ பொதுமக்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்வதாக பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின்,  இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் சம்மேளனம் (NCCF) நுகர்வோர்  விவகாரங்கள் துறை சார்பில், பொதுமக்களுக்கு மலிவு விலையில் கோதுமை மாவு, அரிசி, கடலைப் பருப்பு ஆகியவை  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், மத்திய அரசின் மானிய விலையில், கோதுமை மாவு, அரிசி, கடலைப் பருப்பு ஆகியவை விற்பனை செய்யும் பணிகளை பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. இராமலிங்கம், புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கி வைத்தார். 

Latest Videos

undefined

அப்போது, அரிசி 10 கிலோ ரூ. 290க்கும், பருப்பு கிலோ ஒன்று 60 ரூபாய்க்கும் பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். இந்த மலிவு விலை பொருட்கள், இராசிபுரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நகராட்சி பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இந்த வாகனம் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை மலிவு விலையில் மத்திய அரசின் பாரத் அரிசி, பாரத் பருப்பு, பாரத் கோதுமை ஆகியவற்றை விற்பனை செய்யப்படுகிறது. 

மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் - ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் மாயம் சுற்றுலாவில் நேர்ந்த சோகம்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கே பி இராமலிங்கம், பொதுமக்களுக்கு மலிவு விலையில் நாடு முழுவதும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் நேரடியாக அந்தந்த பகுதியில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விற்பனையானது நேற்று நாமக்கல்லிலும் இன்று இராசிபுரத்திலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

10 கிலோ பச்சரிசி 290 ரூபாய், ஒரு கிலோ கடலை பருப்பு 60 ரூபாய், ஒரு கிலோ கோதுமை மாவு 27 ரூபாய் என்ற மலிவு விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. நாடு முழுவதும் இந்த விநியோகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சராக அமித்ஷா  பொறுப்பேற்ற பிறகு, நாட்டு மக்களுக்கு கூட்டுறவு துறை மூலமாக இதுபோன்ற மலிவு விலையில் நேரடியாக மக்களுக்கு சென்று சேரும் வகையில் நல்ல பொருள்களை அனுப்பி வருகிறார்கள். 

மை வி3 ஆன்லைன் டிவி நிறுவனர் கைது; மருத்துவ அறிக்கையால் அம்பலமான நெஞ்சுவலி நாடகம்

மத்திய பாஜக அரசு பொதுமக்களின் நலன் கருதி, அரிசி, பருப்பு, கோதுமை மாவை விநியோகம் செய்கிறது. ஆனால் தமிழகத்தை ஆட்சி செய்கின்ற திமுக பொதுமக்களுக்கு போதைப் பொருள்களை வினியோகம் செய்கிறது. திமுக அரசாங்கம் நடத்துபவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, திமுக அயலக பிரிவு மாநில செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், 3 ஆயிரம் டன் போதை பொருள்களை  உலகம் முழுவதும் விநியோகம் செய்கிறார்கள். இதுதான் ஆளுங்கட்சியின் நிலைமையாக உள்ளது. ஆளும் கட்சி சாராயம் விற்பதை போல போதை பொருளையும் விற்பனை செய்கிறது. 

வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும்பான்மையான வெற்றி பெறும். தமிழ்நாடு முழுவதும் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதில் ஒரு தொகுதியாக நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திகழும். நாங்களும் கூட்டணி கட்சியும் இணைந்து அந்த வெற்றியைப் பெறுவோம். பொதுவாக, பாரதிய ஜனதா கட்சி சின்னமான தாமரை சின்னம்தான் நாமக்கலில் போட்டியிடும் என அவர் தெரிவித்தார். 

click me!