காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

Published : Apr 23, 2019, 01:23 PM ISTUpdated : Apr 23, 2019, 02:02 PM IST
காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

சுருக்கம்

நாமக்கல் அருகே காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு ஆண், 2 பெண்கள், 3 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது.

நாமக்கல் அருகே காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு ஆண், 2 பெண்கள், 3 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது. 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவிரி ஆற்றில், சிறுவர்கள் விடுமுறை நாட்களில் குளிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில் புகைப்படக் கலைஞரான சரவணன் தனது மனைவி, 2 மகள்கள், பக்கத்து வீட்டு சிறுவா்களுடன் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் 6 பேரும் நீரில் இழுத்து செல்லப்பட்டனர். 

இதுதொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் சரவணன், அவரது மனைவி ஜோதிமணி மற்றொரு பெண் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தகவலறிந்து வந்த போலீசார் சரவணின் மகன்களான இரட்டையர்கள் தீபகேஷ், தாரகேஷ் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டுள்ளதே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நள்ளிரவில் அலறல்! 3 மகள்களை துடிதுடிக்க வெட்டி கொ**! இறுதியில் தந்தை விபரீத முடிவு! கதறிய தாய்! நடந்தது என்ன?
செருப்பை ஒளித்து வைத்ததால் விபரீதம்! பள்ளியிலேயே உயிரிழந்த மாணவர்!!