தமிழ் மொழியின் தலைமகன் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்...

Published : Apr 06, 2019, 09:54 AM IST
தமிழ் மொழியின் தலைமகன் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்...

சுருக்கம்

முதுபெரும் தமிழறிஞரும் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான  சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நல குறைவினால் இன்று காலமானார்.  அவருக்கு வயது 91.இவர் தமிழகத்தின் 3 முதல்வர்களிடமும் பணியாற்றிய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுபெரும் தமிழறிஞரும் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான  சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நல குறைவினால் இன்று காலமானார்.  அவருக்கு வயது 91.இவர் தமிழகத்தின் 3 முதல்வர்களிடமும் பணியாற்றிய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலம்பொலி செல்லப்பன்  1929ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் எனும் ஊரில் பிறந்தவர் ஆவார்.  தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார்.மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

"சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது. "சரசாவின் பொம்மை" என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.1937ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார்.  இவர் கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். தமிழ் எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளரும் ஆவார். உலக தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குனர், உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என பல பணிகளையாற்றியவர்.

பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இளங்கோ இயற்றியருளிய சிலப்பதிகாரம் காப்பியம் இருபதாம் நூற்றாண்டில்தான் புலவர் மனைகளிலிருந்து வெளியேறிப் பொதுமக்களிடையே உலா வருகிறது. சிலப்பதிகாரம் என்றாலே இரண்டு சான்றோர்கள் பெயர் உடனே அனைவரின் நினைவுக்கு வரும். ஒருவர் சிலப்புச் செல்வர் ம.பொ.சி. அடுத்தவர் சிலம்பொலி செல்லப்பன். இவர் கடந்த 60 ஆண்டுகளாக சிலப்பதிகாரத்தைப் பட்டிதொட்டியெல்லாம் அயராது அரும்பாடுபட்டு பரப்பி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த சிலம்பொலி செல்லப்பனுக்கு தொல்காப்பியன், கொங்குவேள் என்ற மகன்களும் மணிமேகலை, கவுதமி, நகைமுத்து ஆகிய மகள்களும் உள்ளனர்.


 

PREV
click me!

Recommended Stories

நள்ளிரவில் அலறல்! 3 மகள்களை துடிதுடிக்க வெட்டி கொ**! இறுதியில் தந்தை விபரீத முடிவு! கதறிய தாய்! நடந்தது என்ன?
செருப்பை ஒளித்து வைத்ததால் விபரீதம்! பள்ளியிலேயே உயிரிழந்த மாணவர்!!