அதிரடியாக இழுத்து மூடப்பட்ட டாஸ்மாக் - பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள் ..

By vinoth kumar  |  First Published Aug 24, 2019, 5:36 PM IST

சீர்காழி அருகே மூன்றாண்டு கால போராட்டத்துக்கு பிறகு டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் பொது மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் .


நாகை மாவட்டம் சீர்காழி அருகே இருக்கிறது மங்கைமடம் கிராமம் . இங்கு ஊரின் பொது வீதியில் அரசு மதுபான கடை ஒன்று நீண்ட நாட்களாக இயங்கி வந்தது . இதனால் பொதுமக்கள் , மாணவர்கள் என பலர் பாதிக்கப்பட்டு வந்தனர் . இரவு நேரங்களில் அந்த பகுதியாக பெண்கள் தனியாக செல்ல பயப்படும் நிலை இருந்தது .

Tap to resize

Latest Videos

undefined

இதனால் மதுபான கடையை மூட வேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்கள் , மாணவர்களை திரட்டி அந்த பகுதியில் இருக்கும் இளைஞர் கூட்டமைப்பினர் போராடி வந்தனர் .இந்தநிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்றுடன் அந்த மதுபான கடையை மூட மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவிட்டார். இதை அறிந்த கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர் .

டாஸ்மாக் முன்னால் திரண்ட அவர்கள் கடையின் வாசலில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர் . பின்னர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மூன்றாண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை கொண்டாடினர் .

click me!