உடைக்கப்பட்ட சில மணிநேரத்திற்குள் புதிய அம்பேத்கர் சிலை... எடப்பாடி அரசின் அதிரடி வேகம்..!

By vinoth kumar  |  First Published Aug 26, 2019, 10:49 AM IST

வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக அரசு சார்பில் சில மணிநேரத்திற்குள்ளாகவே புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. 


வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக அரசு சார்பில் சில மணிநேரத்திற்குள்ளாகவே புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது பாண்டியன் என்பவரது கார் மோதிவிட்டதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாண்டியனின் காரை ஓட்டிச்சென்ற அவரது ஓட்டுநர் காவல் நிலையத்துக்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 10 பேர் பாண்டியனின் கார் மற்றும் காவல் நிலையத்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 

Latest Videos

undefined

இதைக்கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அந்தக் கும்பல் பாண்டியனின் காருக்கு தீ வைத்துள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க முயன்றனர். அவர்களை வன்முறைக் கும்பல் தடுத்து நிறுத்தியதால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும்,பேருந்து நிலையம் இருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதனிடையே அம்பேத்கர் சிலை உடைப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை ஏற்பட்டு, உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக, அரசு சார்பில் இன்று புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது

click me!