நாகை அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த வங்கி ஊழியருக்கு ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
நாகை அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த வங்கி ஊழியருக்கு ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
நாகை மாவட்டம், நாகூர் சிவன் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ராஜேஷ் (36). இவர் பிரபல தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 11 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
undefined
இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 15க்கும் மேற்பட்டோருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், மருத்துவமனை தரப்பில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததால் ராஜேஷ் உயிரிழந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.