இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த சிவக்குமார் தமது சகோதரர்கள் இருவருடன் சேர்ந்து நேற்று மதியம் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்றார். கோடியக்கரைக்கு தென்கிழக்கே அவர்கள் மூவரும் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மீனவர்களின் படகில் ஏறி கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் சிவக்குமாருக்கு தலையில் மூன்று இடங்களில் வெட்டு விழுந்தது. படகில் இருந்த அவரது சகோதரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. மீனவர்கள் வைத்திருந்த 400 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, செல் போன் உள்ளிட்டரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
சக மீனவர்கள் உதவியுடன் கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிய மூவரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் மீதான கடற்கொள்ளைய்ர்கள் தாக்குத்ல் நாளுக்கு நாள் அதிகரித்தாலும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாகை மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இலங்கை கடற் கொள்ளையர்களின் தொடர் தாக்குதலை கண்டித்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.