Latest Videos

Smuggling: காரில் ரகசிய அறை; ரூ.180 கோடி போதைப் பொருளை மடக்கி பிடித்த கியூ பிரிவு அதிகாரிகள் - நாகையில் அதிரடி

By Velmurugan sFirst Published Jun 14, 2024, 4:57 PM IST
Highlights

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.180 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கியூ பிரிவு காவல் துறையினர் வேளாங்கண்ணியில் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கியூப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பூக்கார தெருவில் உள்ள தனியார் விடுதியில் க்யூப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமச்சந்திர பூபதி தலைமையில் காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

அப்போது விடுதியில் தங்கியிருந்த மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் கியாபரி பகுதியை சேர்ந்த தில்குமார் தாபா மங்கர், கவாஸ் ஆகியோரிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஹசிஸ் போதை பொருளை ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. 

Crime: தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை; அரியலூரில் பரபரப்பு சம்பவம்

இதற்காக மேற்குவங்க மாநிலத்தில் இருந்து காரில் ரகசிய அறை அமைத்து அதில் போதை பொருளை கடத்தியதும், அதிக தூரம் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட அசதி காரணமாக வேளாங்கண்ணியில் தங்கியதும் தெரியவந்தது. மேலும் இன்று அதிகாலை ராமேஸ்வரத்தில் போதை பொருளை கொண்டு சேர்க்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

குற்றவாளிகளிடம் கஞ்சாவை கொடுத்து விற்கச்சொல்லும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

இதனையடுத்து அவர்கள் காரில் ரகசிய  அறையில் பதுக்கி வைத்திருந்த 75 கிலோ ஹசிஸ் போதை பொருளையும் க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட ஹதீஸ் போதைப் பொருளுடன் ஹெராயின் கலந்து பிரவுன் சுகர் ஆக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஹசிஸ் போதைப் பொருளுக்கு சர்வ சர்வதேச சந்தையில் 180 கோடி ரூபாய் மதிப்பு எனவும், இந்திய சந்தையில் 3 கோடியே 75 லட்ச ரூபாய் என  போலீசார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கியூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.

click me!