நாகை அரசு மருத்துவமனை இடம் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள் மருத்துவமனை மீண்டும் அதே இடத்தில் இயங்க வலியுறுத்தில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள், சேவை சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜூன் 15ல் முப்பெரும் விழா; கோவை குலுங்கிட வேண்டும் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
இந்த நிலையில், நாகையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வந்த மாவட்ட தலைமை மருத்துவமனையை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நாகை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் சுமார் 5 லட்சம் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒரத்தூருக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து நாகையிலேயே பிறப்பு முதல் இறப்பு வரை மற்றும் ஏற்கனவே இருந்த அனைத்து விதமான மருத்துவ சேவைகளும் சகல விதமான வசதியுடன் இணை இயக்குனர் கட்டுப்பாட்டில் தொடர்ந்து செயல்பட உடனடியாக தமிழக அரசு உத்தரவிட வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு நடைபெற்றது.
ஆன்லைன் ரம்மியால் 7 மாதங்களில் 13 தற்கொலைகள்; தமிழர்களின் நலனில் அக்கறையே கிடையாதா? அன்புமணி ஆவேசம்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பட்டத்தில் மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென நாகை புதிய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.