நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் பிரார்த்தனைக்காக வந்த கேரளாவைத் சேர்ந்த நபர் கால் தவறி குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம், கொல்லம் கொளப்பாடம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் நஜிமுதீன் (வயது 42). இவர் குடும்பத்தோடு நாகை மாவட்டம் நாகூர் தர்காவிற்கு பிரார்த்தனைக்கு வந்து உள்ளார். இதனிடையே பிரார்த்தனைக்கு தர்கா குளத்தில் நஜிமுதீன் இறங்கி உள்ளார்.
மகனின் காதல் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மாமனார் - இராமநாதபரத்தில் பரபரப்பு சம்பவம்
undefined
அப்போது எதிர் பாராத விதமாக கால் தவறி குளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நாகை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் வந்த தீயணைப்பு துறையினர் குளத்தில் இறங்கி நிஜாமுதீனை தேடினர். நீண்ட நேர தேடலுக்கு பின்னர் நிஜாமுதீன் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாகூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்ட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.