Mayiladuthurai: டெல்டா மாவட்ட வயல்வெளியில் இந்தி பாட்டு பாடி நாற்று நடும் வடமாநில இளைஞர்கள்

By Velmurugan s  |  First Published May 30, 2024, 7:57 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் நில உரிமையாளர்கள் திண்டாடி வந்த நிலையில், வடமாநில இளைஞர்கள் தற்போது அந்த தேவையை பூர்த்தி செய்துள்ளனர்.


டெல்டா மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நடவு பணிக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள். களைப்பு தெரியாமல் இருக்க வடமாநில பாடல்களை பாடி உற்சாகத்துடனும் மிக நேர்த்தியாக திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றுபரித்து கைநடவு. குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுவது தங்களுக்கு வரபிரசாதமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி:-

தமிழகத்தில் காவிரி கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான வாழ்வியல் முறையாக இருந்து வருகிறது. பம்புசெட் நீர் மற்றும் காவிரிநீரை கொண்டு அதிக அளவில் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்கு தேவையான ஆட்கள் கிடைக்காததால் கடந்த சில வருடங்களாக விவசாய நில உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் இயந்திரம் மூலம் நடவு மற்றும் அறுவடை செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர். 

Latest Videos

undefined

கடனை திரும்ப கட்ட முடியவில்லை; கடன் பெற்றவரின் மகளை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - தமிழகத்தை உலுக்கும் தேனி சம்பவம்

அறுவடை பணி முழுவதும் இயந்திரம் மூலம் நடந்து வந்தாலும் நடவுப்பணிகளில் இன்னமும் நாற்றுவிட்டு, பெண் கூலிதொழிலாளர்களை கொண்டு நடவு செய்யும் பணிகளை பல விவசாயிகள் செய்து வருகின்றனர். சம்பா, தாளடி பருவத்தில் அடிக்கடி மழை பெய்யும்  என்பதாலும் இயந்திர நடவு செய்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கரைந்து சேதமடைவதை தவிர்ப்பதற்கான பல விவசாயிகள் பழைய முறைப்படி கூலி ஆட்களை வைத்த நாற்றுப்பறித்து பெண் தொழிலாளர்களை வைத்து நடவு செய்து வருகின்றனர். 

ஆனால், கூலி தொழிலாளர்கள் 100நாள் வேலைக்கு சென்றுவிடுவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாய பணிகளின்போது நூறுநாள் வேலையை நிறுத்தி வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தும் பயனில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் வடமாநில தொழிலாளர்களின் உதவியை விவசாயிகள் நாடியுள்ளனர். 

நொடிப்பொழுதில் போர்க்களமான டவுண் ரதவீதி; அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - நெல்லையில் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி பகுதியில் வடமாநில ஆண் தொழிலாளர்கள் விவசாய வேலைகள் செய்து நாற்றுப்பறித்து அவர்களே நடவு செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். ஒப்பந்த முறையில் ஏக்கருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தில் 12 தொழிலாளர்கள் நாற்றுபறித்து நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 1 நாளைக்கு 4 ஏக்கர் வரை நடவு பணிகளை செய்து வருகின்றனர். 

களைப்பு தெரியாமல் இருக்க வடமாநில பாடல்களை பாடி உற்சாகத்துடனும், மிக நேர்த்தியாக திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றுபறித்து கைநடவு செய்து வருகின்றனர்.  குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுவது தங்களுக்கு வரபிரசாதமாக உள்ளதாக விவசாய நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!