நாகையில் திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுத வந்த மாணவியின் செயலால் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி

By Velmurugan s  |  First Published May 22, 2023, 6:19 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று காலை திருமணம் நடந்த நிலையில், புதுமணப்பெண் தனது இறுதி பருவத் தேர்வை மணக்கோலத்தில் வந்து எழுதிச் சென்றார்.


நாகை மாவட்டம் மேல ஓதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன் (வயது 28). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் சித்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த மதுமிதா (22). இருவருக்கும் இன்று திருவாரூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் மணமகள் மதுமிதா திருவாரூர் அருகில் உள்ள சேந்தமங்கலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

மணமகன் பத்மநாபன் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மதுமிதாவிற்கு இறுதி செமஸ்டர் தேர்வு இன்று தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று முதல் தேர்வாக பாலின சமத்துவம் என்கிற தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் காலை 7.30 முதல் 9.00 மணி வரை நடைபெற்ற முகூர்த்தத்தில் திருமணம் முடிந்தவுடன் மணமகன், மணமகள் இருவரும் அவசர அவசரமாக காரில் கல்லூரிக்கு வந்தனர்.

Crime: தோப்பு வீட்டில் வசித்த கணவன், மனைவி கல்லால் அடித்து கொடூர கொலை; எஸ்பி நேரில் விசாரணை

தொடர்ந்து தேர்வு அறை வாசல் வரை மணமகன் வந்து தனது மனைவியை தேர்வு எழுத விட்டுச் சென்றார். மணமகனுக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து மணமகள் மனக்கோலத்தில் தேர்வு எழுதினார். மணமகன் கல்லூரி வாசலில் மாலையுடன் காத்திருந்தார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து மணமகன் அவரை தேர்வு அறை வந்து விட்டு சென்றது மட்டுமல்லாமல் பாலின சமத்துவம் என்கிற தேர்வு நடைபெறும் சமயத்தில் பாலின சமத்துவத்தை நிலை நாட்டிய மணமகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சாலையில் திடீரென மிரண்ட மாடு; ரேக்ளா வண்டி மோதி தூக்கி வீசப்பட்ட மனைவி சம்பவ பலி

click me!