லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக பறிபோன 75 ஆடுகள்; கதறி துடிக்கும் உரிமையாளர்..

By Velmurugan s  |  First Published Mar 29, 2024, 4:39 PM IST

நாகை அருகே மணலூரில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வயல்களில் கிடை போடுவதற்கு ஆடுகளை  ஏற்றி வந்த லாரி வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 75 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோடை காலங்களில் அறுவடை முடிந்து வயல்களில் இயற்கை உரத்தின் தேவைக்காக ஆடுகளை கிடை போடுவது வழக்கம். இதனால் ஆடுகள் போடும் கழிவுகள் வயல்களில் உரமாக படிந்து சாகுபடி நேரத்தில் விளைச்சல் அதிகமாக இருக்கும். இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடுகள் வரவழைக்கப்பட்டு விவசாயிகள் தங்களுடைய வயல்களில் ஆடுகளை கிடை போட வைப்பார்கள். 

“20 வருசமா ரோடு சரியில்ல” பிரசாரத்தின் போது கேட்ட ஒற்றை கேள்வி; கடுப்பாகி பாதியில் கிளம்பிய தங்க தமிழ்செல்வன்

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த மணலூரில் வயல்களில் கிடை போடுவதற்காக செம்மறி ஆடுகளை ஏற்றிவந்த லாரி வயல் பகுதிகளில் சென்ற போது பள்ளத்தில் இறங்கி வயலில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 75 க்கும் மேற்பட்ட ஆடுகள் அனைத்தும் நசுங்கி உயிரிழந்தன. நேற்று இரவு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த சுப்ரமணி, நாகராஜ் என்பவர்குக்கு சொந்தமான ஆடுகளை லாரியில் ஏற்றி வந்துள்ளனர். 

அண்ணாமலையின் கணக்கு தப்பாகி கோவை தொகுதியில் வந்து மாட்டிக்கொண்டுவிட்டார்-விளாசும் கனிமொழி

லாரியை அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் ஓட்டி வர மணலூர் பகுதியில் உள்ள வயல்களுக்கு செல்லக் கூடிய மண்சாலையில் செல்லும் போது ஆடுகள் அனைத்தும் லாரியின் ஒரு பகுதிக்கு வர பாரம் தாங்காமல்  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி வயலில் தலை கீழாக விழுந்துள்ளது. இதில் 75 ஆடுகளும் இறந்துள்ளன. இதனைக்கண்ட ஆட்டின் உரிமையாளர்கள் கதறி ஆழுதனர். இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விராணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!