மாட்டு வண்டியில் ஊர்வலம், சிலிண்டருக்கு மாலை; மத்திய அரசை கலாய்த்த சுயேட்சை வேட்பாளர்

By Velmurugan s  |  First Published Mar 28, 2024, 2:03 PM IST

மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும்,  சைக்கிளில், விறகு, மண்வெட்டியுடன் 3 கி.மீ தூரம் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இறுதி நாளான நேற்று நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக  திருமருகல் ஒன்றியம், போலகம் ஊராட்சியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் விஜயராகவன் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

Latest Videos

முன்னதாக அவர் நாகூர் ரவுண்டானா பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் கேஸ் சிலிண்டருக்கு மாலையிட்டு சைக்கிள் கேரியலில் விறகுகளை வைத்து அதன் மேல் மண்வெட்டியை வைத்து வாக்கு சேகரித்த படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்ய வந்தார். 

வேட்பு மனு தாக்கலின் போது போலீசார் மீது வாகனத்தை ஏற்ற முயன்ற டிடிவி தினகரன்? போலீஸ் வழக்கு பதிவு

அப்போது நாகூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுயேச்சை வேட்பாளருக்கு நீர்மோர் கொடுத்து அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து  தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி 200 மீட்டருக்கு முன்பாகவே போலீசார்  மாட்டு வண்டியில் செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் நடந்து வந்து நாகை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜானி  டாம் வர்கீஸிடம் வேட்பு மனுவை  தாக்கல் செய்தார் சுயேட்சை வேட்பாளர் விஜயராகவன்.

click me!