AIADMK: இங்கேயே தீக்குளித்து சாவேன்; திமுக.விற்கு எதிரான போராட்டத்தில் கார் மீது நின்று ஓ.எஸ்.மணியன் ஆவேசம்

By Velmurugan s  |  First Published Jun 24, 2024, 3:30 PM IST

நாகையில் கள்ளச்சாராய வியாபாரிக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டதை நிரூபித்தால் இங்கேயே தீக்குளித்து சாவேன் என்று முன்னாள் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் சாவல் விடுத்துள்ளார்.


தமிழகத்தில் கள்ளச்சாரய புழக்கத்தை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி உயிரிழப்பிற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரியும் நாகை அவுரித்திடலில் நடைப்பெற்ற  கண்டன ஆர்ப்பாட்டத்தில்  அதிமுகவினர் எடுத்து வந்த கண்டன பதாகைகளை காவல்துறையினர் பிடிங்கியதால் அதிமுகவினர்க்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஷ சாரயம் குடித்தவர்களில் பல பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

வி.சி.க.வுக்கு மாநில அந்தஸ்து பெற்று தந்த மாமன்னன்; திருமாவுக்கு விழா எடுத்து கொண்டாடிய இளம் பெண்கள்

இந்த நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பதவி விலக கோரியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நாகை அவுரித்திடலில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது   ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுகவினர்  மேடை அமைத்த போது  துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான  காவல்துறையினர் அதற்கு அனுமதி அளிக்காமல் தடுத்து நிறுத்தினார். 

கரூர் அருகே நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற சுற்றுலாப் பேருந்து மீது டாரஸ் லாரி மோதி ஒருவர் பலி

மேலும் மேடை அமைக்க எடுத்து வந்த பொருட்களையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். தமிழக அரசிற்கு எதிரான கண்டன முழக்க வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காவல்துறையினர் பிடிங்கி அப்புறப்படுத்த முயன்றதால் நகர செயலாளர் தங்க.கதிரவன் உள்ளிட்ட அதிமுகவினர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பதாகைகளை போலீசாரும், அதிமுகவினரும் மாறி மாறி பிடிங்கியதால் இருத்தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இது ஒரு புறம் நடந்துக் கொண்டிருக்க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது காரை நிறுத்தி அதையே மேடையாக்கி காரின் மேல் ஏறி நின்றுக் கொண்டு தமிழக அரசை கண்டித்து பேசினார். அப்போது பேசிய அவர் நாகை மாவட்டத்தில் சாராய வியாபாரிக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டதாக நிருபித்தால் இங்கேயே தீக்குளித்து சாவதற்கு தயாராக இருப்பதாக ஆவேமானார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். நாகையில் அதிமுக ஆர்ப்பாட்டத்திற் மேடை அமைக்க போலீசார் அனுமதிக்காத நிலையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது காரையே மேடையாக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டது பரப்பரப்பை ஏற்படுத்தியது.

click me!