மதுரை மாவட்டம் தேனூர் மண்டப பகுதியில் வித்தியாசமாக ஷேர் ஆட்டோவை வைத்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த இளைஞர்கள்.
அண்மைக்காலமாக மதுரை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்கள் பைக், கார்களை வைத்து சாகசம் செய்யும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மதுரையில் ஒரு படி மேலே போய் ஆட்டோவை வைத்து ரீல்ஸ் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ள இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகர் மக்களின் முக்கிய போக்குவரத்து அம்சமாக ஷேர் ஆட்டோக்கள் செயல்பட்டு வருகிறன்றன. இங்கு இருக்கும் ஆட்டோக்கள் அரசியல் கட்சி பிரமுகர்களின் மறைமுக ஆதரவோடு முறையான சான்றிதழ்கள் பெறாமலும் இயக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் சித்திரை திருவிழாவின் போது மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக கள்ளழகர் மதுரை வரும்போது தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பார்.
undefined
அந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் தான் தற்போது இளைஞர்கள் ஷேர் ஆட்டோவை வைத்து ரிலீஸ் எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நான்குக்கும் மேற்பட்ட ஆட்டோக்களை வைத்து இளைஞர்கள் ஆட்டோவை வட்டமிட்டபடி சரமாரியாக வைகை ஆற்றுக்குள் ஓட்டுகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு ஆட்டோ கவிழ்ந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் காக்கி உடை அணிந்துள்ள நிலையில் அவர்கள் அன்றாடம் ஆட்டோ ஓட்டுபவர்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது?
ஆணவக்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே தமிழகம் தான் - கே.பாலகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி
அன்றாட மக்கள்களும், குழந்தைகளும் பயன்படுத்தக்கூடிய ஆட்டோக்களை வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.