திருப்பூரில் இளைஞர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த போது அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
திருப்பூரில் இளைஞர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த போது அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தின் மேல் ஒரு நபர் ஏறி நின்றிருக்கிறார். இதனைக் கண்ட சிலர் அவர் நிற்பதை வீடியோ எடுக்க தொடங்கினர். மேலும், அவரை கீழே இறங்கும் படியும் வற்புறுத்தினர். ஆனால், யாரும் சொல்லியும் கேட்காடல் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளார். அவர் கீழே விழுந்த சமயம் நல்வாய்ப்பாக ஒரு பேருந்து வந்ததால், அந்த நபர் அப்பேருந்தின் மீது விழுந்தார். இதனால் அவர் சிறிய காயங்களும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனையடுத்து அங்கிருந்த சிலர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இவரை அழைத்து வந்த உறவினர்கள் அருகிலிருந்த கடைக்குச் சென்றதால், அவர்களிடமிருந்து பிரிந்து வந்த அந்நபர் தன்னை அறியாமல் மேம்பாலத்தில் இருந்து குதித்ததும் தெரியவந்தது.