Crime News: மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

Published : May 15, 2023, 01:27 PM IST
Crime News: மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

சுருக்கம்

மதுரையில் சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலை அழகுபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் விஜய ராஜன் மகன் ஆனந்த குமார்(வயது 22). மதுரையில் அண்மையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் போது இவரது தரப்பினருக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆனந்தகுமார் தனது இருசக்கர வாகனத்தில் தெற்குவாசல் பகுதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் ஆனந்தகுமாரை வழிமறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவன் பலி; 2 மாணவர்களை தேடும் பணி தீவிரம்

ஆனந்தகுமாரை தொடர்ந்து துரத்திய கும்பல் நடு ரோட்டில் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதனால் படுகாயமடைந்த ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த தெற்கு வாசல் காவல் துறையினர் ஆனந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்; பெண் பலி, 21 பேர் காயம்

மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நடந்து முடிந்த சித்திரை திருவிழாவின் போது ஆனந்தகுமார் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!