மதுரை அருகே மதம் மாறிய குறிப்பிட்ட சமுதாய மக்களை ஊர் தலைவர் , ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது .
மதுரை மாவட்டத்தில் உள்ளது பரவை கிராமம் . இங்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கடந்த 1984 ம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இருக்கின்றனர் . கடந்த ஆண்டு அப்படி மாறியவர்களில் சிலர் தாய் மதம் திரும்பியுள்ளனர் .
இந்த நிலையில் , இன்னமும் தாய் மதம் திரும்பாத குடும்பங்களுக்கு ஊர் தலைவர் கட்டுப்பாடு விதித்துள்ளார் . அதன்படி அவர்கள் யாரும் ஊரின் பொதுவில் நடமாட கூடாது , ஊர் குளத்தை உபயோகப்படுத்த கூடாது , ஊரில் உள்ள மற்றவர்களோடு பழக கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து ஊரை விட்டு ஒதுக்கிவைப்பதாக உத்தரவிட்டுள்ளார் .
இதை மீறி அந்த மக்கள் போலீஸ் , கோர்ட் என எங்கு வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம் .. ஆனால் இது தான் ஊர் பஞ்சாயத்தின் தீர்ப்பு என்று அவர் கூறும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது .
இந்த 21 நூற்றாண்டிலும் இப்படியான சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன . அதுவும் 35 வருடங்களுக்கு முன்னர் மதம் மாறியதற்கு இப்போது தீர்ப்பு கொடுக்கும் விநோதங்கள் அரங்கேறுகின்றன ..