பணி நேரத்தில் மருத்துவர்கள் எஸ்கேப் !!! பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண் ........

Published : Aug 13, 2019, 01:02 PM IST
பணி நேரத்தில் மருத்துவர்கள் எஸ்கேப் !!! பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண் ........

சுருக்கம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது . 

மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி பெருமாள் நகர் சேர்ந்தவர் பாலமுருகன் . இவரது மனைவி அகல்யா . கர்ப்பிணியான அகல்யா கச்சைக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்தார் . 

இந்த நிலையில் பிரசவ வலி வந்ததும் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் .அந்த நேரத்தில் அங்கு பணியில் மருத்துவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது . அதனால் செவிலியர்களே பிரசவம் பார்த்து உள்ளனர் .
சிறுது நேரத்திலேயே குழந்தை பிறந்துள்ளது .

பிறந்த இரண்டு மணி நேரம் கழித்து அகல்யாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது . செய்வதறியாது திகைத்த செவிலியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பரிதாபமாக  உயிரிழந்தார் . இதனால் அதிர்ச்சியடைந்த அகல்யாவின் உறவினர்கள் மருத்துவர்கள் பணியில் இல்லாதது தான் உயிரிழப்பிற்கு காரணம் என்றும் , அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் .இந்த சம்பவம் குறித்து சுகாதார துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் .

என்ன விசாரணை  செய்து என்னவாகிட போகிறது .. போன உயிர் இனி திரும்பி வந்திடுமா ???? 

PREV
click me!

Recommended Stories

மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!
நிக்காம ரத்தமா போகுது.. என்னை காப்பாத்துங்கப்பா! வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவியின் கடைசி நிமிடக் கதறல்! நடந்தது என்ன?