ஓபிஎஸ் மாநாட்டிற்கு சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்து.. 17 பேரின் நிலை என்ன?

Published : Apr 25, 2023, 01:42 PM IST
ஓபிஎஸ் மாநாட்டிற்கு சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்து.. 17 பேரின் நிலை என்ன?

சுருக்கம்

திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்று விட்டு ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயமுருகன் உள்பட 17 பேர் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். 

திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்று விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.

எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுகவின் 51ஆம் ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்களான பண்ருட்டி ராமசந்திரன், வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்று விட்டு ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயமுருகன் உள்பட 17 பேர் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே வேன் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்