#Breaking தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் கட்... மின்சார வாரிய அதிரடி முடிவு..!

Published : Dec 02, 2021, 12:25 PM ISTUpdated : Dec 02, 2021, 01:45 PM IST
#Breaking தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் கட்... மின்சார வாரிய அதிரடி முடிவு..!

சுருக்கம்

மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்ற மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

மின் வாரிய ஊழியர்கள் வரும் 7ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால்  ஊதியம் வழங்கப்படாது  என மின்சார வாரிய உத்தரவால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தார். இதனையடுத்து, தமிழக அரசு அதிரடி நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளையும் தொடர்ந்து விரைவுப்படுத்தி வந்தனர். இதனையடுத்து, கொரோனா பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. தமிழக அரசு நடவடிக்கையை பார்த்து மிரண்டு போய் மத்திய அரசே பாராட்டியது. தற்போது வாரம் இரண்டு முறை தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக பொதுசுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த 19ம் தேதி ஆணை வெளியிடப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என  பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள் மற்றும் தெருக்கள், சினிமா தியேட்டர்கள் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் உறுதி செய்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. டாஸ்மாக் செல்வோருக்கும்  தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரான் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் வழங்கப்படாது  என மின்சார வாரிய அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் தரப்பில் கூறுகையில்;- மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்ற மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாகவும், ஆனால் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படும் என்று மதுரை மண்டல  தலைமை பொறியாளர் உமாதேவி  விளக்கம் அளித்துள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!