ஆண்கள் கழிவறைக்கு தோனி படம்.. சர்ச்சையில் சிக்கிய மதுரை மாநகராட்சி - வைரல் சம்பவம்

By Raghupati RFirst Published Jun 13, 2022, 12:20 PM IST
Highlights

MS Dhoni : மதுரை மாநகராட்சி ஆண்கள் கழிவறையில் கிரிக்கெட் வீரர் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை என்றாலே பொதுவாகவே திருமண விழா, காதுகுத்து விழா, நடிகர் நடிகையர் பிறந்தநாள், அரசியல் தலைவர்கள் பிறந்தநாள், என அனைத்துக்கும் வினோதமாக எதேனும் போஸ்டர், பேனர் அடித்து மாஸ் காட்டி ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிரவைத்து விடுவார்கள். 

எந்தவொரு நடிகர்,நடிகை,அரசியல் பிரபலம் என யாராக இருந்தாலும் பக்க மாஸ் போஸ்டரை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழகத்தையே திருப்பி பார்க்க வைத்துவிடுவார்கள். இந்நிலையில் அவர்கள் செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மதுரை மாநகராட்சி ஆண்கள் கழிவறையில் கிரிக்கெட் வீரர் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் கடும் கோபமடைந்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். 

மாநகராட்சியின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. உடனே தோனியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆண், பெண் என படம் வரைந்தாலே கழிவறையை அடையாளம் கண்டுக் கொள்ளும் நிலையில் எதற்காக தோனி புகைப்படம் வைக்க வேண்டும் என்றெல்லாம் கேள்வி எழுந்து. தற்போது ரசிகர்கள் பொது மக்களும் அதிர்ச்சியாகி உள்ளனர்.

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ? 

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

click me!