மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை ஆட்டையை போட வந்த நீங்க தளபதியை பத்தி பேசலாம? விஜய் ரசிகர்கள் ஆத்திரம்.!

Published : Jun 09, 2022, 09:36 AM IST
மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை ஆட்டையை போட வந்த நீங்க தளபதியை பத்தி பேசலாம? விஜய் ரசிகர்கள் ஆத்திரம்.!

சுருக்கம்

சினிமாவின் முண்ணனி நடிகரான நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விநாயக கடவுளை கேலியாக பேசியதாகவும் இதனால் நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை யாரும் பார்க்க கூடாது என பேசினார். இந்த பேச்சானது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

மதுரை ஆதினத்தை கண்டித்து நடிகர் விஜய் ரசிகர்கள் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டிய போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற துறவியர் மாநாடு பொதுக்கூட்டத்தில் பேசிய மதுரை ஆதினம் தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகரான நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விநாயக கடவுளை கேலியாக பேசியதாகவும் இதனால் நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை யாரும் பார்க்க கூடாது என பேசினார். இந்த பேச்சானது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை ஆதினத்தின் பேச்சை கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை மாநகர் முழுவதிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். 

அந்த சுவரொட்டிகளில் எச்சரிக்கை மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா!!! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாம தப்பா!!!  வீண் விளம்பரத்திற்காக கோமாவில் எழுந்து வந்து பிதற்றுவதை நிறுத்து!!! எங்களுக்கு ஜாதி மதம் எதுமில்லை!! தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது.

மதுரை ஆதினத்தின் பேச்சுக்கு எதிரான விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை ஆதினம் ஏற்கனவே அரசியல் ரதீயாக பேசிய கருத்துகள் பேசுபொருளாகிய நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் மதுரை ஆதினம் இருவர்களிடையேயான போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!