தமிழகத்தில் உள்ள பெரிய கோவில் முதல் சிறிய கோவில்கள் வரை ஜூன் 1ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரிய கோவில் முதல் சிறிய கோவில்கள் வரை ஜூன் 1ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் மார்ச் 25ம் முதல் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால், கடந்த இரு மாதங்களாகவே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மதுரை சித்திரை திருவிழா, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட திருவிழாவுக்கும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களை திறக்க அனுமதிக்கக்கோரிய வழக்கை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பெரிய கோயில்களில் ஜூன் 1ம் தேதி முதல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வழிபட அனுமதி அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40,000 கோயில்களில் தரிசனம் செய்வது தொடர்பான அனுமதி விரைவில் வெளியாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு கோவிலுக்கு 500 இ-பாஸ்கள் வீதம் அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.