காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை அம்பன் புயல் ஈர்த்துவிட்டதால் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகர், மதுரை, வேலூர், திருத்தணி, திருச்சி, மன்னார்குடி, சேலம், தர்மபுரி போன்ற நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கும் வானிலை மையம் 23ம் தேதிக்கு பிறகு வெப்பத்தின் தாக்கம் குறையும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் அம்பன் புயல் ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்கள் நோக்கி நகர்ந்தது. இதன்காரணமாக அந்த மாநிங்களில் சூறைக்காற்று வீசி வருகிறது. இன்று அம்பன் புயல் மேற்குவங்க கரையில் பிற்பகலில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை அம்பன் புயல் ஈர்த்துவிட்டதால் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகர், மதுரை, வேலூர், திருத்தணி, திருச்சி, மன்னார்குடி, சேலம், தர்மபுரி போன்ற நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கும் வானிலை மையம் 23ம் தேதிக்கு பிறகு வெப்பத்தின் தாக்கம் குறையும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதலே தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, வேலூர் உட்பட பல்வேறு நகரங்களிலும் வெயில் சதமடித்து சுட்டெரித்து வருகிறது.
மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் வெப்பம் அதிகரித்தது. இதனிடையே அம்பன் புயலால் காற்றின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு வெப்பம் அதிகரிக்க இருப்பதால் மக்கள் மேலும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்ப பகல் 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை திறந்த வெளிகளில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டுமெனவும் பகலில் பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். நேற்றைய நிலவரப்படி சென்னையில் அதிகபட்சமாக 106.5(41.3) டிகிரிக்கு வெயில் பதிவாகி இருக்கிறது.