புத்தாண்டு கொண்டாட்டம்; தமிழகம் முழுவதும் 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By Velmurugan s  |  First Published Dec 30, 2022, 9:31 AM IST

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் வழக்கத்தைக்காட்டிலும் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.


ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை நிறைவு பெறுவதால் தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. வெளியூர் சென்ற பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு ஒரே நேரத்தில் திரும்புவார்கள் என்பதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்கும் வண்ணம் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்..!

Latest Videos

undefined

அதன்படி தமிழக போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட மதுரை கிளை மேலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரையில் இருந்து 31ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக மதுரையில் இருந்து தலைநகர் சென்னைக்கு 160 பேருந்துகளும், கோவைக்கு 100 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

Pele Death: 'கறுப்பு முத்து' சகாப்தம் முடிந்தது!கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் பிரேசில் வீரர் பீலே காலமானார்

இவை தவிர்த்து மீதமுள்ள பேருந்துகள் அண்டை மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல், பழனி, அருப்புக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, கம்பம், விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. தேவைப்படும் பட்சத்தில் இன்னும் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

click me!