என்னது! அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழப்பது கடவுள் செயலா? NH அளித்த பதிலுக்கு லெப்ட் ரைட் வாங்கிய ஐகோர்ட்.!

By vinoth kumarFirst Published Dec 27, 2022, 7:51 AM IST
Highlights

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சை என்பவர் 2018ம் ஆண்டு தனது மனைவி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பொன்னம்பலம்பட்டி பகுதியில் சுங்கச்சாவடிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது சுங்கச்சாவடியின் அறிவிப்பு பலகை விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சி-திண்டுக்கல் பொன்னலாம்பட்டி சுங்கச்சாவடி அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சை என்பவர் 2018ம் ஆண்டு தனது மனைவி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பொன்னம்பலம்பட்டி பகுதியில் சுங்கச்சாவடிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது சுங்கச்சாவடியின் அறிவிப்பு பலகை விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எனவே இழப்பீடு வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  வழக்கு தொடரப்பட்டது. 

இதையும் படிங்க;- தமிழகத்தில் கொரோனா நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்... அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல்!!

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் பயங்கர காற்று வீசியதன் காரணமாகவே அறிவிப்பு பலகை விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது இயற்கையின் சீற்றம், மேலும் கடவுளின் செயலாகவே இருக்க வேண்டும் இதற்கு நெடுஞ்சாலைத்துறை பொறுப்பாகாது என பதிலளிக்கப்பட்டது. 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி நெடுஞ்சாலைத் துறையில் சுங்கச்சாவடியின் அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழந்ததற்கு கடவுளின் செயல் தான் காரணம் என கூறுவதை ஏற்க முடியாது என்றார். மனுதாரரின் மனைவி கூலி தொழில் செய்யக்கூடியவர் எனவே அவருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடை உயிரிழந்த நாளிலிருந்து தற்போது வரை ஆறு சதவீதம் வட்டியுடன் வழங்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.. இதோ லிஸ்ட் இருக்கு நீங்களே பாருங்க..!

click me!