அய்யயோ.. என்னடா இது வம்பா போச்சு.. சீனாவிலிருந்து மதுரை வந்த தாய், மகளுக்கு புதிய வகை கொரோனா தொற்று?

By vinoth kumar  |  First Published Dec 28, 2022, 7:23 AM IST

ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காத வேகத்தில் செல்கிறது. இந்த வாரத்தில் ஒரே நாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


சீனாவில் இருந்து இலங்கை வழியாக  மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காத வேகத்தில் செல்கிறது. இந்த வாரத்தில் ஒரே நாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து பரிசோதனைகளை தீவிர படுத்துங்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- சீனாவில் இருந்து ஆக்ரா வந்த நபருக்கு கொரோனா... அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்ய அறிவுறுத்தல்!!

ஆகையால், சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி சீனா உளள்ளிட்ட வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் இருந்து ஏர் லங்கா விமானம்  70 பயணிகளுடன் நேற்று முன்தினம் காலை மதுரை விமான நிலையம் வந்தது. அதில் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த பயணியிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணுக்கும், அவரது 6 வயது மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், மற்றொரு குழந்தைக்கு பாதிப்பு இல்லை. இதைத்தொடர்ந்து, இவர்களது சொந்த ஊரான விருதுநகருக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு இருவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவர்களின் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் முடிவுகள் வந்த பிறகே  புதிய வகை பிஎப் 7 கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக என்பது  தெரிய வரும். சீனாவில் இருந்து தமிழகத்துக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பொதுமக்கள் மதத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- Corona in India: துபாயில் இருந்து உத்தரப் பிரதேசம் திரும்பிய 2வது நபருக்கு கொரோனா தொற்று

click me!