தேர்வுக்கு எதிர்ப்பு ; ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் ; செமஸ்டர் தேர்வு தள்ளிவைப்பு!

By Kanmani P  |  First Published Nov 15, 2021, 12:03 PM IST

ஆன்லைனில் தான் தேர்வு நடத்த வேண்டும் எனக் கூறி மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் செமஸ்டர் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.


கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 2 வருடமாக ஆன்லைன் மூலமே கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒரு வழியாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த காரணத்தால் தற்போது படிப்படியாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அதோடு மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வருட ஆன்லைன் கற்றலுக்கு பிறகு நேரடி வகுப்புகளை சந்திக்கும் மாணவர்கள் மனதளவிலும் உடலளவிலும் இன்னும் தாயராகவில்லை என்றே தெரிகிறது.

அதன் எடுத்துக்காட்டாக தான் இன்று மாணவர்கள் போராட்டம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட   600க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நேரடி தேர்வே காரணம் என சொல்கின்றனர் போராட்டத்தில் குதித்துள்ள மாணவர்கள்.

Latest Videos

undefined

அதாவது பாடத்தை மட்டும் ஆன்லைனில் நடத்தி விட்டுத் தேர்வுகளை மட்டும் ஏன்  நேரடியாக எழுதச் சொல்கிறார்கள் என மாநிலம் முழுவதும் உள்ள பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி எஸ்ஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில் இன்று காலை முதல் போராட்டத்தில் இறங்கிய மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள்  நேரடி தேர்வுகளை எழுத முடியாது  கல்லூரி முன்பாக கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர். அதன் தொடர்சியாக 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்ற மாணவர்கள் திடீரென ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாடங்களை ஆன்லைனில் நடத்திவிட்டுத் தேர்வுகளை நேரடியாக வந்து எழுதச் சொல்வதை ஏற்க முடியாது எனக் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாவட்ட ஆட்சியர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.

அந்த பேச்சுவார்த்தையின் போது “நேரடி தேர்வுகளை 2 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இருந்தும் நேரடி தேர்வை ரத்து  வரை மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!