நிலக்கோட்டை அருகே காமு, அஜித்கண்ணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, சிலுக்குவார்பட்டி சிவன்கோவில் பகுதியில் வந்தபோது அங்குள்ள சாலை வளைவில் எதிரே வந்த காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் அப்பளம் போல நொறுங்கியது.
நிலக்கோட்டை அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இரண்டு பேரில் ஒரு வாலிபர் 30 அடி உயரம் பறந்து மின்கம்பியில் விழுந்து துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் காமு என்ற காமராஜ் (21). மதுரையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அஜித் கண்ணன் (21). நண்பர்களான இவர்கள் 2 பேரும், தங்களது நண்பர்கள் 18 பேருடன் சேர்ந்து 10 இருசக்கர வாகனங்களில் கடந்த 5-ம் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று காலையில் அவர்கள் மீண்டும் இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
undefined
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காமு, அஜித்கண்ணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, சிலுக்குவார்பட்டி சிவன்கோவில் பகுதியில் வந்தபோது அங்குள்ள சாலை வளைவில் எதிரே வந்த காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் அப்பளம் போல நொறுங்கியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் சினிமாவை மிஞ்சும் காட்சியை போல் இருசக்கர வாகனத்தில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், இருசக்கர வாகனத்தில் பின்னார் அமர்திருந்த காமராஜ் 30 அடி உயரம் தூக்கி வீசப்பட்டு மின்வயரில் தொங்கினார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அஜித்கண்ணன் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்தார். இதில் கார் ஓட்டுநர் லேசான காயமடைந்தார்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், அவர்களை பின்தொடர்ந்து வந்த சக நண்பர்கள் விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.