மதுரை மாவட்டம் ஆனையூர் அருகே உள்ள எஸ்விபி நகரைச் சேர்ந்த சக்திகண்ணன்(42). இவர மனைவி சுபா. இவர்களுக்கு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பிள்ளைகள் இருவரும் கீழே உள்ள அறையில் உறங்கிய நிலையில், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர்.
மதுரையில் வீட்டிலுள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததில் தூக்கிக் கொண்டிருந்த தம்பதி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் ஆனையூர் அருகே உள்ள எஸ்விபி நகரைச் சேர்ந்த சக்திகண்ணன்(42). இவர் இதே பகுதியில் இயற்கை மூலிகை சோப்பு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். மனைவி பெயர் சுபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் சக்தி கண்ணன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு பிள்ளைகள் இருவரும் கீழே உள்ள ரூமில் தூங்க சென்றனர்.மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர்.
இந்நிலையில், நள்ளிரவில் வீட்டு அறையில் உள்ள ஏசியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அறை முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் இருவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். சிறிது நேரத்தில் தம்பதி உடலிலும் தீப்பற்றி எரிந்து சம்பவ இடத்திலயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதனையடுத்து, அதிகாலையில் மாடியில் புகை வருவதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிறகு எரிந்த நிலையில் இருந்த தம்பதி உடலை கைப்பற்றி பிரேத பரசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.