மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நேற்று ஆய்வு.. இன்று ஒப்பந்தம் வெளியீடு.. அதிரடி காட்டும் அமைச்சர் சேகர்பாபு..!

By manimegalai aFirst Published Sep 26, 2021, 11:34 AM IST
Highlights

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்த ராயர் மண்டபத்தை புனரமைக்க 10 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளி வெளியீடு.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்த ராயர் மண்டபத்தை புனரமைக்க 10 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளி வெளியீடு.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீரவசந்த ராயர் மண்டபத்தில் இடிந்து சேதமடைந்தது. இந்த நிலையில் மண்டபத்தை புனரமைக்காமல் மூன்று ஆண்டுகளாக பணி கிடப்பில் போடப்பட்டது.

இதனிடையே கடந்த சில மாதத்திற்கு முன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கற்கள் தேர்வு செய்யப்பட்டு மதுரை செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று ஆய்வு செய்த அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு விரைவில் பணி தொடங்கப்படும் என நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து புனரமைப்பு பணிக்கு ஒப்பந்த புள்ளியை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஒப்பந்த புள்ளி விண்ணப்பம் திரும்ப செலுத்த வருகின்ற அக்டோபர் 27 தேதி 3 மணிக்குள் கோவில் வளாகத்தில் செலுத்த வேண்டும் எனவும், மீனாட்சி அம்மன் கோவில் புனரமைப்பு பணிகளை 36 மாதத்தில் முடிக்க காலத்திற்குள் முடிக்கபடவேண்டும் என்றும்,கோவில் நிர்வாகம் சார்பாக கற்கள் இலவசமாக வழங்கப்படும், தூண்கள், சிம்ம பீடம், சிம்மம், உத்திரம், கபோதகம்,கொடிவாலை, நடகசட்டம் என பழமை மாறாமல் கலைநயமிக்க வகையில் புனரமைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு யாரும் ஒப்பந்தப் புள்ளியை எடுக்க முன்வராத நிலையில் ரத்து செய்யப்பட்டது,மேலும் பழமை மாறாமல் புனரமைப்பிற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

click me!