வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை… மாமனார், 2-வது கணவர் கைது…!

By manimegalai a  |  First Published Sep 22, 2021, 5:33 PM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பெண்ணின் மாமனார், மற்றும் இரண்டாவது கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பெண்ணின் மாமனார், மற்றும் இரண்டாவது கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகள் மாளவிகாவுக்கும் உசிலம்பட்டி அடுத்த பாறைப்பட்டியைச் சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளர் பாண்டி என்பவரது முதல் மகன் பிரபாகரனுக்கு கடந்த 2019-ல் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மாளவிகா குடும்பத்தினர், 120 சவரன் தங்கம் மற்றும் 10 லட்சம் ரொக்கம், சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் பிரபாகரன் இறந்துவிட்டதால் மாளவிகா பெற்றோர் வீட்டில் இருந்துவந்தார். வரதட்சணைப் பொருட்களை கைப்பற்ற திட்டமிட்ட பிரபாகரன் வீட்டார், அவரது தம்பியான பிரகாஷை செல்போனில் மாளவிகாவிடம் பேசவைத்து காதல் வலையில் வீழ்த்தியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

மாமானார் வீட்டின் சதி அறியாத மாளவிகா, தமது பெற்றோர் எதிர்ப்பையும் மீறி பிரகாசை மறுமனம் செய்துகொண்டார். அடுத்த சில மாதங்களில் மீண்டும் நகை, பணம் கேட்டு மாளவிகாவை பிரகாஷ் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாளவிகா கடந்த மாதம் 24-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாளவிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினர் செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடைபெற்ற வரதட்சணை கொடுமையால் மாளவிகா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டு இரண்டாவது கணவன் பிரகாஷ், மாமனார் பாண்டி மற்றும் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மூவரையும் தேடிவந்த போலீஸார் தற்போது பிரகாஷ் மற்றும் அவனது தந்தையை கைது செய்துள்ளனர்.

click me!