அரிவாள், கத்தி வாங்கணுமா? இனி கண்டிப்பாக ஆதார் கட்டாயம்.. போலீஸ் கிடுக்குப்பிடி.!

By vinoth kumarFirst Published Sep 30, 2021, 12:33 PM IST
Highlights

தமிழக காவல்துறை அதிரடியாக நடத்தி வரும் ஸ்டாமிங் ஆபரேஷன் மூலம் இதுவரை 2,512 ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 934  கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

அரிவாள், கத்தி தயாரிக்கும் பட்டறைகள், விற்கும் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். 

தமிழக காவல்துறை அதிரடியாக நடத்தி வரும் ஸ்டாமிங் ஆபரேஷன் மூலம் இதுவரை 2,512 ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 934  கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சில நாட்களுக்கு முன் மதுரை மற்றும் நெல்லையில் போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். 

இதில், தென்மாவட்டங்களில் குற்றவாளிகள், ரவுடிகளை கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் செக்போஸ்ட் அமைத்து வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கத்தி மற்றும் அரிவாள் வாங்க ஆதார் எண் கட்டாயம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நெல்பேட்டை, ஒத்தக்கடை, வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கத்தி மற்றும் அரிவாள் கடைகள் உள்ளன. கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணைக் கண்டிப்பாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் கடை உரிமையாளர்களைப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

click me!