எவ்வளவு சொல்லியும் கேட்காத மாமா.. வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு.. திக் திக் வீடியோ.!

By vinoth kumar  |  First Published Nov 8, 2021, 11:35 AM IST

சாப்டூர் அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்த ராஜசேகர் (30) ஜேசிபி டிரைவராக இருந்து வருகிறார். இவரது ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் ஓடையை கடந்து தான் செல்ல வேண்டும். ஆகையால், இவர் நேற்று மாலை வாழைத்தோப்பு அருகே உள்ள காட்டில் வேலை செய்து விட்டு வீடு திரும்பினார். அப்போது, வழியில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 


எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஓடையை கடக்க முயன்ற ஜேசிபி டிரைவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 26ம் தேதியன்று தொடங்கியது. அப்போது முதலே விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கால்வாய்கள், ஓடைகள், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டை என நிரம்பியுள்ளன.

Latest Videos

undefined

இந்நிலையில்,  சாப்டூர் அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்த ராஜசேகர் (30) ஜேசிபி டிரைவராக இருந்து வருகிறார். இவரது ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் ஓடையை கடந்து தான் செல்ல வேண்டும். ஆகையால், இவர் நேற்று மாலை வாழைத்தோப்பு அருகே உள்ள காட்டில் வேலை செய்து விட்டு வீடு திரும்பினார். அப்போது, வழியில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

அவர் சிரித்து கொண்டே ஓடையை கடக்க முயன்றார். அப்போது அவருடன் இருந்தவர் மாமா ஓடையில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கு உங்களை இழுத்து கொண்டு சென்றுவிடும் என கூறினார். ஆனால், சொல்வதை கேட்காடல்  ஓடையை கடக்க முயன்றார்.அப்போது அளவுக்கு அதிகமாக வெள்ளத்தில் சிக்கி அவர் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனே பதறியடித்துக் கொண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"

 

click me!