மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 பேர் இன்று சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,225ஆக உயர்ந்துள்ளது. 423 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 641 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.