மதுரையில் இரட்டை குழந்தை பெற்ற பெண் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இரட்டை குழந்தை பெற்ற பெண் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தை சேர்ந்த 45 வயது பெண் பெண்ணுக்கு 16 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கர்ப்பமடைந்தார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்கு சென்றார்.
undefined
அங்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே, மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அப்போது, அவர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் எனினும் குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில், குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், இருவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைகள் இருவரையும் உறவினா்களிடம் மருத்துவா்கள் ஒப்படைத்தனா். இதற்கிடையே, உயிரிழந்த பெண்ணின் 14 வயது மகள் கொரோனா தொற்று ஏற்பட்டு ஜூன் 18ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.