சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஆரம்பத்தில் தினமும் பாதிப்பு 100 என்று தான் இருந்தது. பின்னர் தினமும் 1300 பேர் வரை பாதிக்கப்பட்டனர். மதுரையிலும் தற்போது தினமும் 80 முதல் 100 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். மதுரையின் பரப்பளவை ஒப்பிடும் போது, இதுவும் சென்னை பாதிப்பு போன்றது தான். இப்படியே போனால் சில வாரங்களில் மதுரைக்கும் அந்த நிலை வரும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்திருந்தனர். இதனையடுத்து, மதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைக்க அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்திருந்தனர். மேலும், தற்போதைய சூழலில் கொரோனாவைக் கட்டுப்படுத்த எதையாவது செய்யுங்கள், கொரோனா அழிந்தால் போதும் என்ற மனநிலைக்கு பொதுமக்கள் வந்துவிட்டனர்.
undefined
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மதுரையிலும் 7 நாள்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளிலும் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப் பகுதிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ஊரகப் பகுதிகளிலும் முழு முடக்கம் அமலில் இருக்கும்.
மேலும், அம்மா உணவகங்கள், சமுதாயக் கூடங்கள் இயங்க அனுமதி உண்டு. ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது, மருத்துவ அவசர வாகனங்கள் இயங்க மட்டுமே அனுமதி உண்டு. மதுரையில் தற்போது கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 705ஆக அதிகரித்திருக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.