சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்: மதுரையில் திறப்பு!

By Manikanda Prabu  |  First Published Aug 18, 2023, 6:48 PM IST

மதுரை மாவட்டத்தில் சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது


தமிழ்நாட்டில் சிறைக்கைதிகளுக்கான வாழ்வாதாரத்துக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறைவாசிகளுக்கு தொழில் பயிற்சிகள், சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து, சிறைக்கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்குகளை சிறைத்துறை திறந்து வருகிறது. சிறைச்சாலைகளின் அருகிலேயே இத்தகைய பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறை அருகே சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட, சிறைக் கைதிகளால் நடத்தப்படும் FREEDOM பெட்ரோல்/டீசல் விற்பனை நிலையத்தை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, இந்திய ஆயில் தலைமை இயக்குனர் அசோகன் பங்கேற்றனர். சிறைக்கைதிகள் 20 பேரால் இந்த பெட்ரோல்/டீசல் விற்பனை நிலையம் நடத்தப்படவுள்ளது.

Latest Videos

undefined

1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

முன்னதாக, சென்னை புழல், வேலூர், கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மத்திய சிறைச்சாலை அருகே சிறை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், முழுவதும் பெண் கைதிகளால் நடத்தப்படும் நாட்டின் முதல் பெட்ரோல் பங்க், சென்னை புழல் சிறை அருகே அண்மையில் திறக்கப்பட்டது. இதன் மூலம் மாதத்திற்கு தலா சுமார் ரூ.6,000 வரை சிறைக்கைதிகளுக்கு ஊதியம் வழங்கப்படுவதாக தெரிகிறது.

click me!