மதுரை புது மண்டபத்தைப் புதுப்பிக்க ரூ.2 கோடி... முதல்வரிடம் உறுதி கூறிய நன்கொடையாளர் ராஜேந்திரன்

By SG Balan  |  First Published Aug 17, 2023, 4:21 PM IST

மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்விக்காக நிதிக்கொடை அளித்து சேவை செய்துவரும் மதுரை தத்தநேரி ராஜேந்திரனைச் சந்தித்து அவரது பணிகளைப் பாராட்டினார். 


மதுரை மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபத்தை புதுப்பிக்க ரூ.2 கோடி ரூபாய் நிதியுதவி செய்வதாக மதுரையை நன்கொடையாளர் ராஜேந்திரன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உறுதி அளித்துள்ளார்.

86 வயது முதியவர் ராஜேந்திரன், மதுரை தத்தனரி பகுதியில் அப்பளம், வற்றல் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை ரூ.1.10 லட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்திருக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இணையத்தில் கசிந்த பீகார் பாஜக பெண் எம்.எல்.ஏ.வின் மார்பிங் செய்யப்பட்ட படங்கள்!

இந்த ஆண்டு மதுரை கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை ரூ.71.45 ஆயிரம் செலவில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

பாசத்துக்குப் பெயர் போன மதுரையில் பாசமிகு பெரியவர் தத்தநேரி இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகளில் படித்திட வேண்டும் என்ற முனைப்போடு அவர் ஆற்றும் கல்விப் பணிகள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மதுரை மக்களால்… pic.twitter.com/Ih0XUZnciX

— M.K.Stalin (@mkstalin)

இந்த நிலையில், புதன்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்விக்காக நிதிக்கொடை அளித்து சேவை செய்துவரும் மதுரை தத்தநேரி ராஜேந்திரனைச் சந்தித்து அவரது பணிகளைப் பாராட்டினார். ராஜேந்திரனுக்கு சால்வை அணிவித்த முதல்வர், தன் தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை ஒன்றையும் கொடுத்தார்.

அப்பள வியாபாரி ராஜேந்திரனை சந்தித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "பாசத்துக்குப் பெயர் போன மதுரையில் பாசமிகு பெரியவர் தத்தநேரி இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகளில் படித்திட வேண்டும் என்ற முனைப்போடு அவர் ஆற்றும் கல்விப் பணிகள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மதுரை மக்களால் பேசப்படும் என்பது உறுதி. அவர் போன்ற மனிதர்களோடு உறவாடும் நேரங்களில் காலம் சற்றே உறைந்து நிற்காதா!" என்று எழுதியுள்ளார்.

அண்மையில், பட்டிமன்றப் நடுவரும் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையாவும் ராஜேந்திரனை நேரில் சந்தித்து பாராட்டியது பொன்னாடை அணிவித்து குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-3 vs லூனா-25: நிலவின் தென்துருவத்தில் முதலில் தடம் பதிக்கப்போவது இந்தியாவா? ரஷ்யாவா?

click me!