மதுரையில் கம்பீரமாக நிற்கும் டி.எம்.எஸ்! முழு உருவச் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

By SG Balan  |  First Published Aug 16, 2023, 9:51 PM IST

மதுரையில் பழம்பெரும் திரையிசைப் பாடகர் கலைமாமணி டி.எம். செளந்தரராஜன் அவர்களின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்துள்ளார்


மதுரையில் பழம்பெரும் திரையிசைப் பாடகர் கலைமாமணி டி.எம். செளந்தரராஜன் அவர்களின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பல பிரபல நடிகர்களின் பாடங்களில் ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியவர் பின்னணி பாடகர் டி.எம்.எஸ். தமிழ் மட்டுமின்றி பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கிறார். 2013ஆம் ஆண்டு 91 வயதில் காலமான அவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

Tap to resize

Latest Videos

undefined

ஃபயாஸ்தீன் பேச்சை கவனிச்சீங்களா? திமுகவின் கல்லூரி வசூல் வேட்டையை விளாசும் அண்ணாமலை!

பழம்பெரும் திரையிசைப் பாடகர் கலைமாமணி டி.எம். செளந்தரராஜன் அவர்களுக்கு மதுரை முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த டி.எம்.எஸ். சிலையை திறந்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றார். முதல்வர் வருகையை முன்னிட்டு மாநகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர்.

இந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சாமிநாதன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன் வசந்த், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சென்னையில் அஞ்சல் துறை வேலைவாய்ப்பு... 2,994 பணியிடங்கள்... தகுதித் தேர்வும் கிடையாது!

click me!