Latest Videos

Crime: காதலிச்சி கர்ப்பமாக்க தெரியும், கல்யாணம் பண்ண முடியதா? ராணுவ வீரரை பொளந்து கட்டிய உறவினர்கள்

By Velmurugan sFirst Published Jun 27, 2024, 7:06 PM IST
Highlights

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த இராணுவ வீரரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரது மகன் இராமன். இந்திய இராணுவத்தில் ஜம்மு காஷ்மீரில் தற்போது பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அதே ஊரைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி இளம்பெண் ஒருவருடன் நட்பாக பழகி திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் அப்பெண்ணை மிரட்டி கருவில் இருந்த குழந்தையை கலைக்க வைத்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக, இளம்பெண் உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக இராணுவ வீரரான ராமனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி இன்று உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக இராணுவ வீரர் இராமன் ஆஜரானார்.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு எல்லாம் விடியல் கொடுத்தவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எச்.ராஜா விமர்சனம்

விசாரணையில் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக இராணுவ வீரர் இராமனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, இராமன் இளம்பெண் வீட்டினரை பார்த்து மிரட்டியதாக கூறி இருபிரிவினரும் காவல் நிலையம் முன்பே ஒருவரை ஒருவர் கடுமையா தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளம் பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம்; தோழியின் ஸ்டேட்டசால் அம்பலமான காவலரின் சித்து விளையாட்டு

இதனைத் தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசார் தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து இராணுவ வீரரை மீட்டு நீதிமன்ற காவலுக்காக அழைத்துச் சென்றனர். காவல் நிலையம் முன்பே இளம்பெண் மற்றும் இராணுவ வீரரின் உறவினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!