குடியரசு தலைவர் வருகை; 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

By Velmurugan s  |  First Published Feb 15, 2023, 6:32 PM IST

உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சிவராத்திரி தினமான வரும் 18ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.  தொடர்ச்சியாக கோவிலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வருகைதரவுள்ள நிலையில் கோவிலை சுற்றி இன்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள தங்கு விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகிறது. இதேபோன்று ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் பயணிகளிடம்  பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி மதுரை மாவட்டம் முழுவதும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் மீனாட்சியம்மன் கோவிலில் குடியரசு தலைவருக்கான  பாதுகாப்பு அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்துவருகின்றனர். இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் அனைத்துதுறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை; மகிளா நீதிமன்றம் அதிரடி

இதில் குடியரசு தலைவரின் வருகை, சாமி தரிசனத்திற்கான ஏற்பாடுகள், அன்னதானத்தில் பங்கேற்று குடியரசு தலைவர் உணவு அருந்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை, காவல்துறை, உளவுத்துறை, உணவுபாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை ,அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

ஒருவரை ஒருவர் காப்பாற்ற நினைத்து 4 பள்ளி மாணவிகள் காவிரியில் மூழ்கி பலி

click me!