தென்காசி காதல் திருமண விவகாரம்... கிருத்திகா பட்டேல் உறவினர்களின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!!

By Narendran S  |  First Published Feb 15, 2023, 5:05 PM IST

தென்காசி காதல் திருமணம் விவகாரத்தில் கிருத்திகா பட்டேலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜாமீன் கோரிய மனுமீதான விசாரணை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 


தென்காசி காதல் திருமணம் விவகாரத்தில் கிருத்திகா பட்டேலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜாமீன் கோரிய மனுமீதான விசாரணை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த வினித் என்பவரை குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிருத்திகா பட்டேல் என்பவர் பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கடந்த டிச.27 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெண் வீட்டார், வினித்தை தாக்கிவிட்டு கிருத்திகாவை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி எருதுவிடும் திருவிழா; ஆக்ரோஷத்துடன் சீறிப் பாய்ந்த 300 காளைகள்

Latest Videos

undefined

இதை அடுத்து கிருத்திகா பட்டேலை கடத்தியதாக அவரது காதலன் வினித், குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம்சந்திரமேஷிஹா ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஜெகதீஷ் லலித்குமார், ராஜேஷ் பட்டேல், நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல், விஷால், கீர்த்தி பட்டேல், சண்முகராஜ், மைத்திரிக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இதனிடையே இந்த வழக்கில் ஜாமின் கோரி வழங்க கோரி முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம்சந்திரமேஷிஹா ஆகிய 4 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: நூற்றாண்டு பிறந்த நாளை கொண்டாடும் சத்யவாணி முத்து.! யார் இவர் தெரியுமா.?

மேலும் தலைமறைவாக உள்ள ஜெகதீஷ் லலித்குமார், ராஜேஷ் பட்டேல், நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல், விஷால், கீர்த்திபட்டேல், சண்முகராஜ், மைத்திரிக் ஆகிய 8 பேரும் முன் ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில், கிருத்திகா பட்டேல் கடத்தப்படும் சிசிடிவி விடியோ காட்சிகள் உள்ளது. அவர் கேரளா வழியாக 5 கார்களில் அடுத்தடுத்து மாற்றம் செய்து குஜராத்துக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளார். கிருத்திகா பட்டேல் சம்பந்தமான ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வில் நிலுவையில் உள்ளது. எனவே ஜாமின் மற்றும் முன் ஜாமின் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து வழக்கு விசாரணையை பிப்.20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

click me!