மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணிரத்னம் என்பவர் இந்த மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக மாணவி தந்தையிடம் கூறியுள்ளார்.
மதுரையில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணிரத்னம் என்பவர் இந்த மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக மாணவி தந்தையிடம் கூறியுள்ளார்.
undefined
இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் மேற்பட்டு மோதலானது. இதுதொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மணிரத்னம் கைது செய்யப்பட்டு சிறை அடைக்கப்பட்டார். சமீபத்தில் ஜாமீனில் இருந்து மணிரத்னம் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வெளியே வந்ததும் வராதுமாக மீண்டும் மாணவியிடம், காதலிக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அந்த மாணவி தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த மணிரத்னம் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்து, மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் வீட்டின் முன்பகுதி சேதமானது. இதுகுறித்து மாணவியின் தந்தை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மணிரத்னம் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னை காதலிக்க மறுத்ததால் மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக மணிரத்னம் கூறியுள்ளார்.